என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் தூக்கு போட்டு சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள தோப்புப்பட்டி மெயின்ரோட்டைசேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் பாரதி (வயது13). பாரதிக்கு நெஞ்சு வலி இருந்து வந்தது. பல இடங்களில் வைத்தியம் பார்த்து நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாரதி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பாரதியின் தாய் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தேவதானப்பட்டி அருகே உள்ள மேட்டுவளைவு பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது60). கூலித்தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வேலைக்கு சென்றபோது மாடு முட்டி காயம் அடைந்தார். இதில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

  இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×