என் மலர்

  செய்திகள்

  போராட்டம்
  X
  போராட்டம்

  முசிறியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  முசிறி:

  திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முசிறி கைகாட்டி கிளைத்தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

  ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சிவராஜ், ராஜா, சம்பத், கிருஷ்ணன் உள்பட பலர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். அப்போது மத்தியஅரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மத்தியஅரசு கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் நிர்வாகிகள் மணிகண்டன், மோகன், நவமணி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

  முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

  Next Story
  ×