என் மலர்

  செய்திகள்

  பெயிண்டர் மணிகண்டன்
  X
  பெயிண்டர் மணிகண்டன்

  வாலிபருடன் மனைவி ஓட்டம் - தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற பெயிண்டர் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை கவுண்டம்பாளையம் அருகே மனைவி வாலிபருடன் ஓடியதால் தற்கொலைக்கு முயன்ற பெயிண்டரை பொதுமக்கள் மீட்டு போலீசில் ஓப்படைத்தனர்.
  கோவை:

  கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). பெயிண்டர். இவரது மனைவி லலிதா (28). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

  இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு லலிதா, மணிகண்டனை பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார். மணிகண்டன் தனது தாய் திலகாவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயும் மாயமாகி விட்டார்.

  மனைவி, தாய் ஆகியோர் சென்றதால் மணிகண்டன் மிகுந்த தனிமையில் மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

  அதன்படி அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் நேற்று மாலை வடகோவை ரெயில் நிலையத்துக்கு வந்த மணிகண்டன் அங்குள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.

  இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தண்டவாளத்தை விட்டு வர மறுத்து விட்டார். பின்னர் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சபரி ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

  பின்னர் மணிகண்டனை மீட்டு போலீசில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
  Next Story
  ×