என் மலர்

  செய்திகள்

  கொள்ளை நடந்த செல்போன் கடை.
  X
  கொள்ளை நடந்த செல்போன் கடை.

  கும்மிடிப்பூண்டியில் கடையை உடைத்து ரூ.3 லட்சம் செல்போன் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்மிப்பூண்டியில் செல்போன் கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
  கும்மிடிப்பூண்டி:

  கும்மிடிப்பூண்டியில் செல்போன்கடை வைத்திருப்பவர் தினேஷ்.

  நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை கடை திறந்து இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து தினேஷ் அங்கு சென்று பார்த்தார்.

  அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது செல்போன் வைக்கப்பட்டிருந்த டிராயர்கள், பணம் இருந்த லாக்கர் ஆகியவை திறந்து கிடந்தன.

  கடையில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ரொக்க பணம் ரூ.4 ஆயிரம் திருட்டு போயிருந்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

  கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். குறியீடு எண்கள் மூலம் போன்களை கைப்பற்றுவோம். விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×