search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை ராமநாதபுரம் மாவட்ட ரே‌ஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ராமநாதபுரம்:

    நியாயவிலைக் கடைகளுக்கு தனித்துறை அமைக்க வேண்டும். பணியாளர்களுக்கு மாநில உணவுப் பொருள்கள் கார்பரேசன் ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் கோரிக்கை பரிசீலனைக் குழுவின் அறிக்கையை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ரே‌ஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில துணைத் தலைவர் தினகரன், இணைச் செயலர் மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், துணைத் தலைவர் பழனீஸ்வரன், துணைத்தலைவர் செல்வம், துணைச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் பாரதி,மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் பேசினர். ஆகஸ்ட் 8-ந்தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    பொருளாளர் செல்லம் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவிவரும் கடும் குடிநீர் பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் சரிசெய்யவேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×