என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருப்பூரில் தொடர் கொள்ளை - கோவை நகை கடை ஊழியர் உள்பட 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கோவை நகை கடை ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  வெள்ளகோவில்:

  திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மூலனூர் பகுதியில் கடந்த வாரம் சக்திவேல் (வயது 52) என்பவரை 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.850-ஐ பறித்தனர். இது குறித்து அவர் மூலனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வாகன சோதனையில் சக்திவேல் கொடுத்த அடையாளத்தின் பேரில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

  போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி பழக்கரை சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்த நிர்மல் பாரதி என்ற குமார் (26), திண்டுக்கல் மாவட்டம் பழனிகணக்கன்பட்டி கோம்பைபட்டியை சேர்ந்த ரவிக்குமார் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.

  தொடர் விசாரணையில் இவர்கள் திருப்பூர் மாவட்டம் மூலனூர் காதக்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது வீட்டில் 10 பவுன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.

  இது தவிர மூலனூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரது வீட்டில் 9 பவுன் நகை, தாராபுரம் ஆர்.கே. நகரில் நடந்த சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு மற்றும் தாராபுரம் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 87 பவுன் என மொத்தம் 109 பவுன் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

  நகைகள் குறித்து விசாரித்த போது கோவையில் நகை கடையில் வேலைபார்த்து வரும் உறவினரான உத்தர பிரதேசத்தை சேர்ந்த தினேஷ்குமார் (39) என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

  இது குறித்து மூலனூர் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் நிர்மல்பாரதி, ரவிக்குமார் மற்றும் திருட்டு நகை வாங்கிய கோவை தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×