search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தஞ்சை-நாகையில் பரவலாக மழை

    தஞ்சை-நாகையில் பரவலாக மழை பெய்தது. இதமான காற்றும் வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் பொது மக்களை வாட்டி எடுத்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்றுமுன்தினம் பேராவூரணி, சீர்காழி, வேதாரண்யம், உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, வல்லம், பேராவூரணி, பூதலூர், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே தஞ்சையில் கடந்த 2 நாளாக காற்று வீசியது. இன்று காலையில் வானம் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணியளவில் தஞ்சை நகரில் லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. அந்த நேரத்தில் இதமான காற்றும் வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பின்னர் புதிய பஸ் நிலையம், வல்லம் மற்றும் தஞ்சையின் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    இதேபோல் இன்று காலை நாகை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

    நாகையில் காலை 6 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் மழை பெய்தது. இதனால் ரோட்டோரங்களில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் இருசக்கர வாகனங் களில் செல்வோர் கடும் அவதிப்பட்டனர்.

    தற்போது நாகையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, கீழ்வேளூர், நாகூர், சீர்காழி திட்டச்சேரி, பொறையார், மயிலாடுதுறை, செம்பனார்கோவில் மற்றும் வேதாரண்யம் ஆகிய ஊர்களிலும் இன்று மழை பெய்தது.

    Next Story
    ×