என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  முள்ளோடையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முள்ளோடையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பாகூர்:

  கடலூர் பகுதியை சேர்ந்த 2 பேர் புதுவைக்கு வேலைக்கு செல்வதற்காக இன்று காலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். பரிக்கல்பட்டு- முள்ளோடை சாலை வழியே வந்து கடலூர்- புதுவை சாலையை கடக்க முயன்றனர். அப்போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் சக்கரத்தில் சிக்கி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து லாரி மோதி காயம் அடைந்த 2 பேரும் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×