என் மலர்

  செய்திகள்

  சாலை மறியல்
  X
  சாலை மறியல்

  எண்ணூரில் ரேசன்கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எண்ணூரில் உணவு பொருள் முழுமையாக வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  திருவொற்றியூர்:

  எண்ணூர் வணக்கம் வ.உ.சி. நகரில் ஒரு ரேசன் கடை உள்ளது. இங்கு 850 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

  கடந்த சில மாதங்களாக இங்கு மண்எண்ணை மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக வழங்குவதில்லை.

  பொருட்களை வாங்க பல மணி நேரம் காத்திருந்தாலும் சிறிது நேரத்தில் பொருட்கள் தீர்ந்து விட்டது. அடுத்த மாதம் வாருங்கள் என ரேசன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களை திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  இந்த நிலையில் இன்று மண்எண்ணை வாங்க அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே மண்எண்ணை வழங்கிய ஊழியர்கள் இல்லை என கூறினர்.

  இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  தகவல் அறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
  Next Story
  ×