என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  அம்பை:

  அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மருதுபாண்டி என்ற சதீஷ் (வயது 19), கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அம்பை அகஸ்தியர்கோவில் பகுதியில் இருந்து ஊர்க்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

  அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சதீஷ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக அம்பை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×