search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    பிரியங்கா கைதை கண்டித்து கரூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து கரூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கரூர்:

    உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் ஏற்பட்ட நிலப்பிரச்சினையில் பழங்குடி விவசாயிகள் 10 பேர் கடந்த 17-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம அடைந்தனர். இதையடுத்து உயிரிழந்த மக்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட அவரை உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு கைது செய்தது. பின்னர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் காவலில் வைக்கப்பட்ட அவர் பிடி வாதத் துடன் இருந்து பாதிக் கப்பட்ட மக்களை சந்தித்து திரும்பினார். இந்த நிலையில் பிரியங்கா கைதை கண்டித்து காங்கிரசார் 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். 

    கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிர மணியன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், துணை தலைவர் சின்னையன், மாவட்ட மகளிரணி தலைவி உமாமகேஸ்வரி, துணை தலைவர் ஜெயந்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிவசாமி, ஜெயசீலன் மற்றும் திரளான காங்கிரசார் கலந்து கொண்டனர். 

    ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த காங்கிரஸ் கட்சி எந்த அடக்குமுறைக்கும் அஞ்சப் போவதில்லை என ஆவேசமாக கூறினர். மேலும் பா.ஜ.க. அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×