search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் சாரல் மழை

    குமரி மாவட்டத்தில் நேற்று சூறை காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் பெய்யத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்யத் தொடங்கியது. சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. பின்னர் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

    முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, குலசேகரம், மார்த்தாண்டம் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு சாரல் மழையும் பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    விடுமுறை தினமான இன்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரு கிறது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் தோவாளை, அனந்தனாறு, புத்தனாறு சானல்களில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் அகஸ்தீஸ்வரம், ஈச்சன்விளை, கண்டன் விளை, தடிக்காரன் கோணம் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்வயர்களும் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தடைபட்டது.

    Next Story
    ×