search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    விளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது - கனிமொழி

    விளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ் உள்பட எந்த மொழிகளின் வளர்ச்சிக்காகவும் நிதி ஒதுக்கவில்லை.

    தமிழின் வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் தான் பெயர் வைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில்கூட பெயர்கள் வைக்கப்படுவதில்லை. அவற்றை தமிழில் மொழி பெயர்க்க முடியவில்லை.

    நிர்மலா சீத்தாராமன்

    ஹைட்ரோ கார்பன் திட்டம் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்றும் சோலை வனமாக இருந்தவற்றை பாலைவனமாக்க மாட்டோம் என்றும் தமிழிசை சவுந்தர் ராஜன் கூறியுள்ளார்.

    ஒரு நாட்டுக்கு உணவு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. விவசாயத்துக்கு என்று ஒதுக்கிய இடத்தில் ஹைட்ரோ கார்பன் கொண்டு வருவது சரியல்ல. விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்தக்கூடாது.

    8 வழிச்சாலைக்கு புதிதாக பெயர் வைத்திருக்கிறார்கள். என்ன பெயர் மாற்றம் செய்தாலும் மக்களின் விளை நிலத்தை பறிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×