என் மலர்

  செய்திகள்

  மின்சார ரெயில்
  X
  மின்சார ரெயில்

  பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் சேவைகள் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
  சென்னை:

  ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

  சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால், காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும்.

  இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

  இதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

  பராமரிப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
  Next Story
  ×