என் மலர்

  செய்திகள்

  வழக்கு (கோப்பு படம்)
  X
  வழக்கு (கோப்பு படம்)

  வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  நிலக்கோட்டை:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் பாண்டியம்மாள் (வயது 25). இவருக்கும் வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த நாகபாண்டி (30) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டது.

  திருமணமான சில மாதங்க ளிலேயே மனைவியின் 7 பவுன் நகைகளை கணவர் நாகபாண்டி வாங்கி விற்றுவிட்டார். மேலும் 20 பவுன் நகைகள் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரச் சொல்லி கணவர் வீட்டார் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

  இது குறித்து பாண்டியம்மாள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேன் மொழி விசாரணை நடத்தி வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் நாகபாண்டி, மாமனார் நாகராஜன் (55), மாமியார் பார்வதி (48), கணவரின் தம்பி சின்னராஜா (27) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×