search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    பிரியங்கா காந்தி கைதை கண்டித்து கோவை, திருப்பூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    உத்தரபிரதேச பா.ஜ.க. அரசால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மற்றும் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி முன்னிலை வகித்தார்.இதில் கட்சி நிர்வாகிகள் வீனஸ் மணி, பச்சைமுத்து, சவுந்திரகுமார், கணபதி சிவக்குமார், மகேஷ்குமார், திருமூர்த்தி, வக்கீல் கருப்பசாமி, ராமநாகராஜ், காந்தகுமார், உமா மகேஸ்வரி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூலூர் பேருந்து நிலையம் முன் மத்திய அரசை கண்டித்து வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சி.எஸ்.டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் மேயர் வெங்கடாசலம், சின்னையன், சூலூர் சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர் காயத்ரி, அபிராம் சின்னசாமி, கோவிந்தராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சுந்தராபுரத்தில் மாவட்ட தலைவர் எம்.பி.சக்திவேல் தலைமையில் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முகமது இஸ்மாயில், முருக நாதன், கு.பே.துரை, மதுசூதனன், கோபால கிருஷ்ணன், நந்தகுமார், கண்ணன், புவனேஸ்வரி, அன்சர், தென்னரசு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் உ.பி.யில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கோபால்சாமி, ஆறுமுகம், முனீஸ்வரன், பொதுச்செயலாளர் ரத்தின குமார், துணைத்தலைவர் கோபால்ஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×