என் மலர்
செய்திகள்

உருவப்படம் திறந்த முதல்வர் பழனிசாமி
தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு
தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் பஙகேற்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் திருவுருவப் படம் சட்டப்பேரவை மண்டபத்தில் 19-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்படும் என சபாநாயகர் தனபால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை திறந்து வைத்தார்.
இந்த விழாவில், சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்பட பலர் பங்கேற்பறனர்.
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்... தீரம்... தியாகம்’ என எழுதப்பட்டுள்ளது.
Next Story