என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  செய்யாறு அருகே கோவில் திருவிழா பணம் வசூலிப்பதில் தகராறு- 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செய்யாறு அருகே கோவில் திருவிழாவுக்கு பணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  செய்யாறு:

  செய்யாறு அடுத்த காழியூரை சேர்ந்தவர் முனுசாமி (வவயது 35). அதே ஊரில் உள்ள அம்மன் கோவிலில் ஆடிதிருவிழாவிற்கு பணம் வசூலித்து வந்தார். அப்போது ஏழுமலை (22) பணம் தரமுடியாது என கூறியுள்ளார்.

  இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஏழுமலையின் உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தி (28), முத்துராமன் (52), முருகன் (42), வேதபுரி (62), சின்னராஜி (27) ஆகியோர் முனுசாமியை சரமாரியாக தாக்கினர்.

  இதில் படுகாயம் அடைந்த முனுசாமியை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  இது குறித்து முனுசாமி செய்யாறு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகா லட்சுமி வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி வேதபுரி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×