என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் ஜெயக்குமார்
  X
  அமைச்சர் ஜெயக்குமார்

  தேசிய கல்வி கொள்கை: நடிகர் சூர்யா கருத்து கூறியதில் தவறு இல்லை - ஜெயக்குமார் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறியதில் தவறு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  ராயபுரம்:

  ராயபுரத்தில் உள்ள அன்னாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

  அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியாக உரிமை உள்ளது, அது தவறு இல்லை.

  வேலூர் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாததற்கு கமல்ஹாசன், பிக்பாசில் பிசியாக இருப்பதால் 100 நாட்களுக்கு வெளியே வர முடியாது. அதனால் தான் கமல்ஹாசன் வெளியே வரவில்லை.

  தி.மு.க. மொழியை வைத்து வியாபாரம் செய்பவர்கள். அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா வழியில் செயல்படும் நாங்கள் இந்தியை எந்த வகையிலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்

  எங்கள் கொள்கைகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தி.மு.க.வை போல் டெல்லிக்கு பாத பூஜை செய்து நாங்கள் பதவிகளை பெறவில்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

  இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

  Next Story
  ×