search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    பெண் ஊழியர் புகார் எதிரொலி - பந்தலூர் நீதிபதி ‘சஸ்பெண்டு’

    கோர்ட்டில் வேலை பார்த்த பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பந்தலூர் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வருபவர் செந்தில் முரளி. இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பந்தலூரில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். செந்தில் முரளி கடந்த 2 வருடங்களுக்கு முன் காங்கயம் நீதி மன்றத்தில் பணியாற்றியபோது ஊழியர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கோர்ட்டில் வேலை பார்த்த பெண் ஊழியர் ஒருவர் நீதிபதி செந்தில் முரளி தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், தாக்கியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் கடந்த 2 வருடங்களாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த விசாரணையில் செந்தில் முரளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில் முரளியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×