என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அப்டா மார்க்கெட்டில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி
Byமாலை மலர்18 July 2019 11:41 AM GMT (Updated: 18 July 2019 11:41 AM GMT)
நாகர்கோவில் அருகே அப்டா மார்க்கெட்டில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
தக்கலையை அடுத்த அழகியபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 60).
இவர், வடசேரி அப்டா மார்க்கெட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அவர் மார்க்கெட்டில் உள்ள ஜெனரேட்டர் அறைக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதில், தூக்கி வீசப்பட்டு ராஜ்குமார், படுகாயம் அடைந்தார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்- இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×