என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மஞ்சூர் அருகே விஷம் வைத்து ஆண் கரடி கொலையா? வனத்துறையினர் விசாரணை
Byமாலை மலர்18 July 2019 11:34 AM GMT (Updated: 18 July 2019 11:34 AM GMT)
மஞ்சூர் அருகே ஆண் கரடி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கொலையா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள சன்னிசைடு என்ற இடத்தில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பெரிய கரடி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் குந்தா ரேஞ்சர் சரவணன், வனவர் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ஜெய்கணேஷ், செல்வன் உள்ளிட்டோர் விரைந்து வந்து கரடியின் உடலை மீட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் ராஜமுரளி, பொன்கலைவாணி ஆகியோர் வரவழைக்கப்பட்டு கரடியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் கரடியை அங்கேயே தீ வைத்து எரித்தனர். சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி வயது மூப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த பகுதிமக்கள் இங்கு கரடிகளுக்கு விஷம் வைக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே யாரும் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்றனர். பிரேத பரிசோதனை வந்த பின்பே கரடி விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story
×