என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
Byமாலை மலர்18 July 2019 10:31 AM GMT (Updated: 18 July 2019 10:31 AM GMT)
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
தென் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்று வட்டார பகுதிகளான அத்திக்கோம்பை, மார்க்கம் பட்டி, இடையக்கோட்டை, லக்கையன் கோட்டை, அம்பிளிக்கை, கீரனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் காய்கறிகள் சாகுபடி குறைந்தது. இதனால் உள்ளூர் வரத்து இல்லை. ஆந்திரா, மைசூர் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம், உள்ளி வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதே போல் தேனி பகுதியில் இருந்து கோவக்காய், மத்தன், இலவன் காய்கள் பொள்ளாச்சி பகுதியில் இருந்தும், சேனைக்கிழங்கு கரூர் பகுதியில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தக்காளி மலை கிராமங்களான பாய்ச்சலூர், பெத்தேல்புரம், பால்கடை உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இதன் காரணமாக காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உள்ளூர் வெங்காயத்துக்கு விலை கிடைக்காத நிலையில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.45-ல் இருந்து ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வருடம் ரூ. 10-க்கு விற்ற உள்ளி வெங்காயம் தற்போது ரூ.30 வரை விலை கேட்கப்படுகிறது. பல்லாரி வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது.
தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.500-க்கு விற்கப்படுகிறது. உள்ளூர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Next Story
×