என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதவரம் - சிறுசேரி மெட்ரோ வழித்தட பாதைக்கு சுரங்கம் தோண்டுவதில் சிக்கல்
Byமாலை மலர்18 July 2019 9:46 AM GMT (Updated: 18 July 2019 9:46 AM GMT)
மாதவரம்-சிறுசேரி மெட்ரோ 2-வது கட்ட பணிக்காக சுரங்கம் தோண்டுவதற்காக மண் ஆய்வு செய்யப்பட்டதில் பூமிக்கு அடியில் கடின பாறைகள் மற்றும் களி மண் நிறைந்துள்ளது. கடின பாறைகள் களி மண்ணால் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு கூடுதல் கால நேரம் ஏற்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கி.மீட்டர் தூரத்துக்கு 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்காக ரூ.85 ஆயிரம் கோடி செலவில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மண் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
மாதவரம் - சிறுசேரிக்கு சுரங்க மெட்ரோ வழித்தடம் அமைப்பு பணிக்காக மண் ஆய்வு பரிசோதனை செய்யப்பட்டதில் கடின பாறைகள் அதிகம் இருப்பது தெரிய வந்தது.
வடசென்னை பகுதியில் பல இடங்களில் 20 மீட்டர் ஆழத்தில் கடின பாறைகள் அதிகம் நிறைந்துள்ளது. தென் சென்னையில் ஓ.எம்.ஆர். வழித்தடத்தில் 10 மீட்டர் ஆழத்துக்கு பாறைகள் உள் ளன.
52 கி.மீட்டர் தூரவழித்தட பாதையில் கடினமான கரும்பாறைகள் உள்ளதால் சுரங்கம் தோண்டுவதில் கூடுதல் கால நேரம் விரயம் ஏற்படும் என்று என்ஜினீயர்கள் கருதுகிறார்கள்.
மாதவரம்-பெரம்பூர் வரையிலான வழித்தட பாதையில் அதிகமான களிமண் நிறைந்துள்ளது. பெரம்பூர்-தரமணி- சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் கடினமான பாறைகள் பூமிக்கடியில் உள்ளன. இந்த பகுதியில் 50 மீட்டர் ஆழத்துக்கு இந்த கடின பாறைகள் அதிகம் காணப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×