என் மலர்

  செய்திகள்

  பலி
  X
  பலி

  அவினாசியில் மாடியில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவினாசியில் மாடியில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  அவினாசி:

  அவினாசி தெக்கலூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 50).

  இவர் தெக்கலூர் சமத்துவபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவரது மனைவி விசாலாட்சி (44) ஆலத்தூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார்.

  இந்நிலையில் ஆசிரியர் லோகநாதன் நேற்று மாடியில் இருந்த குப்பைகளை சேகரித்து கீழே கொட்டினார். அப்போது கால் தவறி மாடியில் இருந்து விழுந்தார்.

  தலையில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×