search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள்
    X
    அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள்

    வெளியூர் பக்தர்கள் அதிகரிப்பால் ஸ்தம்பித்த காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் நகரத்துக்குள் வெளியூர் வாகனங்கள் அனைத்தையும் போலீசார் செல்ல அனுமதித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    அத்திவரதரை தரிசிக்க இன்று காலை முதலே வெளியூர் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. காலை 9 மணி நிலவரப்படி சுமார் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

    வெளியூர் பக்தர்களின் வாகனங்கள் காஞ்சிபுரம் நகரத்துக்குள் அனுமதிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. காஞ்சிபுரம்- வாலாஜா சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    காஞ்சிபுரம் நகரத்துக்குள் வந்த வெளியூர் பக்தர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று இருந்தனர்.

    வழக்கமாக காஞ்சிபுரம் நகரத்துக்குள் உள்ளூர் வாகனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு தனி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக ஒளிமுகமது பேட்டை, அய்யம்பேட்டை, ஒரிக்கை, பொன்னேரி கரையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகிலேயே கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து காஞ்சிபுரம் வருவதற்கு மினி பஸ் இயங்கி வருகின்றன.

    கடந்த 2 நாட்களாக வெளியூர் வாகனங்கள் அனைத்தையும் போலீசார் காஞ்சிபுரம் நகரத்துக்குள் செல்ல அனுமதித்து வருகிறார்கள்.

    இதனால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×