search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஐ.சி.எப். ரெயில்வே மேம்பால பணி: தமிழக அரசு ரூ. 10 கோடி வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    ஐ.சி.எப். ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு தமிழக அரசு ரூ.10 கோடி வழங்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்வி வருமாறு:-

    கொளத்தூர் தொகுதியில் ஐ.சி.எப்.பில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை விரைவில் முடிக்கும்படி மத்திய மந்திரிக்கு 2 முறை கடிதம் எழுதி இருக்கிறேன். நான் 12 முறை நேரில் ஆய்வு செய்திருக்கிறேன். இன்னும் 2 மாதத்தில் பணிகள் முடியும் நிலையும் உள்ளது.

    தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடியே 75 லட்சம் வழங்கினால் இந்த பணி முடிவடையும். அதற்கு அரசு ஆவன செய்யுமா?

    அமைச்சர் வேலுமணி


    அமைச்சர் வேலுமணி:- இந்த ரெயில்வே மேம்பால பணி ரெயில்வே துறையுடன் தமிழக அரசும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன. விரைவில் ரூ. 10 கோடி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். மேம்பால பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    Next Story
    ×