என் மலர்

  செய்திகள்

  பாலியல் தொந்தரவு
  X
  பாலியல் தொந்தரவு

  அரூர் அருகே பெண்ணிடம் பாலியல் தொந்தரவு- வாலிபர் தப்பி ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணவரை இழந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 35). இவரது கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று கமலா அம்மாபேட்டையில் உள்ள சென்னம்மாள் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அந்த கோவிலின் அருகே நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கமலாவிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் கமலா கூச்சலிட்டார். எனவே அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

  இதனைத் தொடர்ந்து கமலா அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கமலா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அந்த வாலிபரை கைது செய்யக்கோரி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

  இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×