என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் செங்கோட்டையன்
  X
  அமைச்சர் செங்கோட்டையன்

  அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை - செங்கோட்டையன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகள் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
  சென்னை:

  சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒரு சில பத்திரிக்கைகளில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு முற்றிலும் தவறு என்றும், இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக தான் சேர்க்கப்பட்டுள்ளது.

  மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகள் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. அங்கு பள்ளிகளுக்கு பதிலாக நூலகம் இயக்கப்படும். ஒரு ஆசிரியரின் மாத ஊதியம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் ஆக உள்ள நிலையில், ஒருவருமே இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது. தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு, அந்த பள்ளிகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும்

  மலேசியா நிறுவனங்களின் நிதி உதவியுடன் விரைவில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக டேப் ( tap) வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
  Next Story
  ×