என் மலர்

  செய்திகள்

  காமராஜர்
  X
  காமராஜர்

  திருமானூர் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
  திருமானூர்:

  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய ராமன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், ஊராட்சி மன்ற செயலாளர் ரமேஷ், எஸ்.எம்.சி தலைவி இந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று காமராஜரின் உருவபடத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

  மாணவ, மாணவிகள் காமராஜர் வேடம் அணிந்து காமராஜர் வாழ்க்கை சிறப் பையும் சுய சரிதையையும் பாடல்களாக பாடினர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்றினர். 

  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஜெயராமன், ஆசிரியர்கள் தமிழ்செல்வி, ஜமுனாராணி, லில்லிமேரி தெரஸ், பேபி நளினி, கண்ணகி, சாமிதுரை, மகேஸ்வரி, பெனிட்டா அக்சி லியா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியை செந்தமிழ் செல்வி நன்றி கூறினார்.
  Next Story
  ×