என் மலர்
செய்திகள்

கைது
திருவள்ளூர் சென்ற மின்சார ரெயிலில் நர்சிடம் சில்மிஷம்- போதை வாலிபர் கைது
திருவள்ளூர் சென்ற மின்சார ரெயிலில் நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை சேர்ந்த 18 வயது இளம்பெண். அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு பணி முடிந்து அம்பத்தூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.
அப்போது அதே பெட்டியில் குடிபோதையில் இருந்த வாலிபர் திடீரென நர்சின் அருகே அமர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய பின்னரும் அந்த வாலிபர் நர்சை பின் தொடர்ந்து வந்தார்.
இது பற்றி அந்த நர்சு திருவள்ளூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போதையில் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story