என் மலர்

  செய்திகள்

  எடப்பாடி பழனிசாமி
  X
  எடப்பாடி பழனிசாமி

  ஆழியாறு ஆற்றில் 3 தடுப்பணைகள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
  சென்னை:

  சட்டசபையில் ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

  பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, வால்பாறை சட்டமன்றத் தொகுதி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட நீர்பிடிப்புப் பகுதிகளில் கூடுதலாகப் பெய்யும் மழைநீர் கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக மழை நீரை சேமித்து பயன்படுத்தும் வகையில் மேலும் கூடுதலாக தடுப்பணைகள் கட்டுதல் குறித்தான கருத்துருக்களுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ளன.

  மேலும், ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பான கருத்துருக்கள் கேரள மாநில அரசோடு பேசி ஒப்புதல் பெறப்பட்டபின் மேல் நடவடிக்கை தொடரப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×