என் மலர்

  செய்திகள்

  போலீஸ் விசாரணை
  X
  போலீஸ் விசாரணை

  போச்சம்பள்ளி அருகே பெண் மீது தாக்குதல் - 5 பேரிடம் போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போச்சம்பள்ளி அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  போச்சம்பள்ளி:

  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள ஆமனக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது45). அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (50). இவர் 20-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்து வந்தார்.

  இவரது கோழிகள் மகேஸ்வரி வீட்டின் அருகே கோழி கழிவுகளை கழித்து விட்டு வந்தது. இதனால் மகேஸ்வரிக்கும், சண்முகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் மற்றும் மாதம்மாள், பழனியப்பன், முருகன், சரவணன் ஆகிய 5 பேர் சேர்ந்து நேற்று மகேஸ்வரியை சரமாரியாக தாக்கினர்.

  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

  இது குறித்து பாரூர் போலீசில் மகேஸ்வரி புகார் கொடுத்தார். அந்த புகாரில் சண்முகம் தரப்பினர் மாதம்மாள், பழனியப்பன், முருகன், சரவணன் ஆகிய 5 பேர் சேர்ந்து என்னை தாக்கியுள்ளனர் என்று கூறியிருந்தார்.

  மேலும் சண்முகம் தரப்பினர் பழனியப்பனும் போலீசில் மகேஸ்வரி, மகேஸ்வரன், ரித்திக், ரத்தினம், காசி ஆகிய 5 பேர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் மகேஸ்வரி வீட்டின் முன்பு சென்ற எங்களது கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

  இரண்டு தரப்பு புகார்களையும் பெற்று கொண்ட போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×