என் மலர்

  செய்திகள்

  போராட்டம்
  X
  போராட்டம்

  காரியாபட்டியில் லேப்-டாப் வழங்க கோரி மாணவிகள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் லேப்-டாப் வழங்க கோரி சென்ற ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  காரியாபட்டி:

  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு படித்த 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் தற்போது படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது.

  இதை அறிந்த பழைய மாணவிகள் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்டு தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். பின்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

  இதை அறிந்த காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மாணவிகளின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின்பு மாணவிகள் கலைந்து சென்றனர்.

  பின்னர் மாணவிகள் விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் சென்று மனு கொடுக்க உள்ளதாக கூறி கலைந்து சென்றனர்.
  Next Story
  ×