என் மலர்

  செய்திகள்

  தற்கொலை முயற்சி
  X
  தற்கொலை முயற்சி

  சகோதரி கணவரால் கர்ப்பமான இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலம் அருகே சகோதரி கணவரால் கர்ப்பமான இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  பேரையூர்:

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரியவாகைகுளத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (வயது 47). இவர்களது மகள்கள் தமிழரசி (22), நித்யாதேவி (20).

  சில வருடங்களுக்கு முன்பு 2-வது மகள் நித்யா தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

  இந்த நிலையில் நித்யா தேவி உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பாலமுருகன் தமிழரசியிடம் தவறாக நடந்து கொண்டார். இதில் அவர் கர்ப்பம் ஆனார்.

  இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த தமிழரசி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த சம்பவம் தொடர்பாக சிங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×