என் மலர்

  செய்திகள்

  நகைகள்
  X
  நகைகள்

  கோழிப்பண்ணை மேலாளர் வீட்டில் 33 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே கோழிப்பண்ணை மேலாளர் வீட்டில் 33 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பல்லடம்:

  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் முருகன் நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து(57). இவர் அதே பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் மேலாளராக உள்ளார். இவருக்கு கலாமணி(49) என்ற மனைவியும், விக்னேஷ்(28) என்ற மகனும் உள்ளனர்.

  விக்னேசுக்கு திருமணமாகி பிருந்தா என்ற மனைவி உள்ளார். விக்னேஷ் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும், பிருந்தா கோவையில் ஒரு சாப்ட்வர் கம்பெனியிலும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தான் வீடு திரும்புவர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கலாமணி பொள்ளாச்சியில் உள்ள தங்களுடைய தோட்டத்திற்கு சென்றவர் திரும்பி வரவில்லை.

  நேற்று வழக்கம்போல் வீரமுத்து, விக்னேஷ், பிருந்தா ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

  இரவு வேலை முடிந்து வீரமுத்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் பதறிப் போன அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 33 நகைகள் காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏதேனும் தடயங்கள் உள்ளனவா? என்பதை வீடு முழுவதும் தேடி பார்த்தனர்.

  இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசி பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்து விசாரித்து வருகின்றனர்.


  Next Story
  ×