search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்.ராதாகிருஷ்ணன்
    X
    பொன்.ராதாகிருஷ்ணன்

    வேலூர் தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும்: பொன். ராதாகிருஷ்ணன்

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று வந்தார். அப்போது அவர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக அரசியலில் அந்த அரசு முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அங்கு ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் காரணமாக எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து வெளியே செல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீது அவர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதனால் தான் இவ்வாறு நடக்கிறது.

    கர்நாடகா மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் யாரையும் கொக்கிபோட்டு இழுக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. பா.ஜ.க. மாநிலங்களவையில் விரைவில் பெரும்பான்மை பெறும். தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டமும் வரக்கூடாது என்று எதிர்கட்சிகள் எதிர்க்கிறார்கள். அப்படி இருந்தால் தமிழகம் எப்படி முன்னேற முடியும். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லவில்லையென்றால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.

    பிரதமர் மோடி

    கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சிகாலத்தில் தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை. திமுகவும் எந்த திட்டத்தையும் கேட்டதில்லை. மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் என்ன என்ன திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்தார் என்ற விபரத்தை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன்.

    காமராஜர் கொண்டு வந்ததுதான் இலவச கல்விதிட்டம். தமிழகத்தில் 1500 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் 1.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்தி வி‌ஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் பிள்ளைகள் மட்டும் இந்தி படிக்கலாம். ஏழை- எளியவர்கள் குழந்தைகள் இந்தி படிக்க கூடாது என்றால் இந்த சதி எந்த நாட்டிலும் கிடையாது.

    தனியார் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கும் பாடங்களை அரசு பள்ளிகளிலும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் குறித்து காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்துக்களை வாபஸ் பெறவேண்டும. வேலூர் பாராளுமன்றதேர்தலில் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×