search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி-இஞ்சி விலை உயர்வு

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மற்றும் இஞ்சி விலை உயர்ந்துள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

    பருவ மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால் விளைச்சல் குறைந்து காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்து உள்ளது.

    இதன் காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, கோஸ் ஆகியவை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தற்போது கோயம்பேடு சந்தைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெங்களூர் தக்காளி தற்போது 35 ரூபாய்க்கும் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி 200 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோஸ் தற்போது 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×