என் மலர்

  செய்திகள்

  நகை அபேஸ்
  X
  நகை அபேஸ்

  பூதப்பாண்டி அருகே மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை அபேஸ்- வாலிபர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூதப்பாண்டி அருகே பாதாம் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 5½ பவுன் நகையை அபேஸ் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.

  நாகர்கோவில்:

  பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32).

  இவர் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  மேலபுத்தேரியைச் சேர்ந்த சந்தோஷ் (29) எங்கள் குடும்பத்தினருடன் பழகி வந்தார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்து பாதாம்பால் வாங்கி வந்து கொடுத்தார். அந்த பாலை நான் குடித்ததும் மயங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தேன்.

  அப்போது நான் அணிந்திருந்த 5½ பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருந்தது. பாதாம் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சந்தோஷ் என்னை மயக்க ம் அடையச் செய்துள்ளார். பின்னர் நான் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அவர் திருடிச் சென்று விட்டார். அவரிடம் இருந்து எனது நகையை மீட்டுத் தர வேண்டும்.

  இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். 

  அதன்பேரில் போலீசார் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×