search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நகை கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

    நகை கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை போலீசர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமான்ராம் (வயது41).  நகை கடை அதிபரான  இவரை கடந்த மாதம் 8-ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. ரூ.1 கோடி கேட்ட அவர்கள், அதன்பிறகு ரூ.40 லட்சம் கொடுத்த பின்பு நகைக்கடை அதிபர் குமான்ராமை விடுத்தனர். 

    இதுகுறித்து குமான்ராம் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், தேவகானப்பள்ளியை சேர்ந்த நாகராஜ், தேன்கனிக் கோட்டையைச் சேர்ந்த மாதேஷ், பிரபாகர், குமார், கிருஷ்ணப்பா உள்பட 7 பேர் கடத்திலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து நாகராஜ், மாதேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தேன்கனிக்கோட்டை அடுத்த ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்த பிரபாகர் (27), கிருஷ்ணப்பா (47) ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் நகை கடை அதிபரான குமான்ராமை கடத்திய வழக்கில் போத்தசந்திரத்தை சேர்ந்த லோகேஷ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். 

    தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×