என் மலர்

  செய்திகள்

  மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
  X
  மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

  கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

  இந்தநிலையில் கோலியனூர், விரும்பாக்கம், வீராட்டிக்குப்பம், நன்னாடு, கோவைப்பாடு, முண்டியம்பாக்கம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை பலத்த மழை பெய்தது.

  இதேபோல் திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், மடப்பட்டு, கெடிலம், சேந்தநாடு, பிள்ளையார்குப்பம், திருவெண்ணைநல்லூர், அரசூர், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 1 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ராகவன் வாய்க்காலில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் விளைநிலங்கள் மற்றும் கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

  கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிபுலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் இரவு 1 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை காலை 5 மணிவரை பெய்தது. மேலும் இன்று காலையும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

  புவனகிரி மற்றும் அதன் சுற்றுபகுதியான பெருமாத்தூர், கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  Next Story
  ×