என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தாராபுரத்தில் கைக்குழந்தையுடன் நகை கடையில் திருடிய சகோதரிகள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாராபுரத்தில் கைக்குழந்தையுடன் நகை கடையில் நகையை திருடிய சகோதரிகளை போலீசார்கைது செய்யப்பட்டனர்.
  தாராபுரம்:

  தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் புதிய நகை கடையை நடத்தி வருபவர் ராஜூ. நேற்று மதியம் ஊழியர்கள் சாப்பிட சென்றபோது 2 மாத கைகுழந்தையுடன் 2 பெண்கள் கடைக்கு வந்தனர். கடை உரிமையாளர் ராஜூ மட்டும் இருந்தார்.

  வளையல் வேண்டும் என்று பெண்கள் கேட்டனர். வளையல்களை காண்பித்தார். சிறிதுநேரம் பார்த்த பெண்கள் எந்த டிசைனும் பிடிக்கவில்லை என்று கூறி புறப்பட்டுச்சென்றனர். சந்தேகத்தின் பேரில் நகைகளை சோதனை செய்தார். அப்போது 2 பவுன் நகை கொண்ட ஒரு வளையல் கவரிங் என்று தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஓடிச்சென்று பொதுமக்கள் உதவியுடன் பிடித்து தாராபுரம் போலீல் ஒப்படைத்தார்.

  போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் தாதக்கப்பட்டி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கார்த்திகேயனின் மனைவி தனலட்சுமி (வயது 34) என்பதும், இவரது குழந்தை தான் அந்த 2 மாத குழந்தை என்பதும் தெரியவந்தது. மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ கோவிந்தன் என்பவரது மனைவி ராதா (38) என்பவர் என்றும் பெண்கள் இருவரும் அக்காள் தங்கை என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தாராபுரம் கோர்ட்டில் ஒப்படைதனர். தனலட்சுமி கைக்குழந்தையுடன் உள்ளதால் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ராதாவை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  இதில் ராதா மீது அரூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களில் 7 நகை திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×