search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
    X
    காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

    முதுகுளத்தூரில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

    முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து, பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து 2018-19 ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையினையும், வறட்சி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் கடந்த 3 ஆண்டுகளாக வறட்சியால் வேலை வாய்ப்பை இழந்த விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை பஞ்ச பகுதியாக அறிவித்து 100 சதவீதம் காப்பீட்டு தொகையை வழங்கி வளர்ச்சிக்கான பணிகளான குளம், கண்மாய், வரத்து கால்வாய்களை மண் மராமத்து செய்யவும் குண்டாறு தடுப்பணை அருகே அமைந்துள்ள தனியார் போர்வெல்களில் இருந்து அதானி சோலார் நிறுவனத்தில் மின் தகடுகளை கழுவ, குடிநீர் திருடப்படுவதை தடுத்து நிறுத்தி குடிநீர் பஞ்சத்தில் சிக்கியுள்ள முதுகுளத்தூர், கமுதி, கடலாடி தாலுகா கிராமங்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாலுகா அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் சண்முகவேல், விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா தலைவர் ராமநாதன், மாவட்ட துணைச் செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×