என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
  தக்கலை:

  தக்கலையை அடுத்த குமாரகோவிலைச் சேர்ந்தவர் அய்யப்பதாஸ் (வயது 34), கூலித்தொழிலாளி.

  அய்யப்பதாஸ், அதே பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

  திருமணம் முடிந்த பின்பு அய்யப்பதாஸ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அய்யப்பதாஸ், தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு காப்பாற்றினர்.

  இந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை மூண்டது. இதில் ஐஸ்வர்யா கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

  நேற்று மாலை ஐஸ்வர்யா மீண்டும் வீட்டிற்கு வந்தார். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

  அங்கு அய்யப்பதாஸ் சேலையில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி ஐஸ்வர்யா, தக்கலை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று அய்யப்பதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×