search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோட்டூர் அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோட்டூர்:

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோட்டூர் அருகே புழுதுகுடி ஊராட்சி சோழங்கநல்லூர், புழுதுகுடி, சோமாசி, ஆண்டிக்கோட்டகம், தெற்குலேரி, சபாபதிபுரம், குமாரமங்கலம், ஈசனக்குடி, பல்லவராயன்கட்டளை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று சோழங்கநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தேவதாஸ், பாலஞானவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் புதிய எண்ணெய் கிணறு தோண்டும் பணியை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×