என் மலர்

  செய்திகள்

  புகார்
  X
  புகார்

  காதல் மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போச்சம்பள்ளி அருகே வேலைக்கு செல்லும் தகராறில் பெற்றோர் வீட்டுக்கு சென்ற காதல் மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
  போச்சம்பள்ளி:

  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள அரசம்பட்டியை சேர்ந்தவர்முருகன். இவரது மகன் உமாபதி (வயது23). பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் மகள் கவுசல்யா (23). பயோ மெடிக்கல் படித்து முடித்த இவரும், உமாபதியும் காதலித்து வந்தனர். 

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு போச்சம்பள்ளி கருநெடுபழனி ஆண்டவர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் இருவரும் தற்போது அரசம்பட்டியில் வசித்து வருகின்றனர். 

  இந்த நிலையில் உமாபதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த கவுசல்யா நானும் வேலைக்கு செல்கிறேன் என்று கணவரிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காணப்பட்ட கவுசல்யா கோபித்து கொண்டு பெரம்பலூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். அங்கு உமாபதி சென்று நாம் ஒன்றாக சேர்ந்து  குடும்பம் நடத்தலாம் என்று மனைவியை அழைத்தார். ஆனால் அதற்கு  கவுசல்யா வர மறுத்ததாக தெரிகிறது.

  இது குறித்து பாரூர் போலீசில் உமாபதி புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மனைவி கவுசல்யாவை பெற்றோரிடம் இருந்து மீட்டு தரக்கோரி கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×