search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்டி அளிக்கும் முதல்வர் பழனிசாமி
    X
    பேட்டி அளிக்கும் முதல்வர் பழனிசாமி

    அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் - முதல்வர் பழனிசாமி

    தமிழக அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டு விடும் என்பதாலேயே எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கட்சிகல் எதிர்த்து வருகின்றனர் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தமிழக முதல்வர் பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப் படுகொலைகள் நடக்கிறது. தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் 

    நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்-தி.மு.க. தான்; இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது பழி போடுகின்றனர்

    எட்டு வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல. மத்திய அரசின் திட்டம். இந்த திட்டத்தால் 70 கி.மீ. பயண தூரம் குறையும். இந்த திட்டம் வந்தால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்றுதான் எதிர்க்கின்றனர்.

    கையகப்படுத்தப்படும் இடங்கள் மற்றும் தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு கடந்த ஆட்சியை விட அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டு வரப்படுகிறது. இத்திட்டம் சேலத்திற்கானது மட்டுமல்ல, இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×