என் மலர்

  செய்திகள்

  ரெயில் விபத்து
  X
  ரெயில் விபத்து

  மதுரையில் இன்று ரெயில் மோதி 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் ரெயில் மோதி 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் இன்று காலை மதுரை கல்லூரி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாள பகுதியில் நடந்து சென்றார்.

  தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரமேஷ் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதுரை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் பகுதியில் 35-வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அவர் அங்கிருந்த தடுப்புகளை தாண்டி ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

  அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

  தகவலறிந்த மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×