search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொல்.திருமாவளவன்
    X
    தொல்.திருமாவளவன்

    பீட்டர் அல்போன்சுக்கு காமராஜர் விருது- திருமாவளவன் அறிவிப்பு

    ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்படும் காமராசர் கதிர் விருது இவ்வாண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு வழங்கப்படுகிறது.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம்.

    தி.மு.க. தலைவர் கலைஞர், புதுச்சேரி முதல்-அமைச்சர் வெ.நாராயணசாமி, முதுபெரும் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் தோழர்.நல்லக்கண்ணு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

    2019 -ம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

    அம்பேத்கர் சுடர் - தி இந்து ஊடகக் குழுமத்தின் தலைவர் என்.ராம்

    பெரியார் ஒளி - வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன்

    காமராசர் கதிர் - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சு

    காயிதேமில்லத் பிறை, வரலாற்று அறிஞர் செ.திவான்

    அயோத்திதாசர் ஆதவன் - நாகப்பன், சென்னை

    செம்மொழி ஞாயிறு - நல்லி குப்புசாமி

    இந்த விருதுகள் வருகிற 29-ந்தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×