search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறிகோழி
    X
    கறிகோழி

    கேரளாவில் மழையால் நுகர்வு குறைவு- பல்லடம் கறிகோழி விலை வீழ்ச்சி

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்து வருவதாலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தட்ப வெப்ப நிலை மாறி குளிர்ச்சி ஏற்பட்டு உள்ளதாலும் கறிக்கோழி உற்பத்தி அதிகரித்துள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கறிக்கோழி உற்பத்திக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. பல்லடம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளது. இங்கு தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்ப பட்டு வருகிறது. கேரளாவிற்கு மட்டும் மாதம் ஒரு கோடி கிலோ கறிக்கோழிகள் அனுப்பப்படுகிறது. இந்த கறிக்கோழிக்கான விலையை பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டியினர் நிர்ணயம் செய்து வருகிறார்கள்.

    கடந்த மாதம் பண்ணை விலை கொள்முதல் ஒரு கிலோ ரூ. 88 ஆக இருந்தது. தற்போது 72 ஆக குறைந்து விட்டது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்து வருவதாலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தட்ப வெப்ப நிலை மாறி குளிர்ச்சி ஏற்பட்டு உள்ளதாலும் கறிக்கோழி உற்பத்தி அதிகரித்துள்ளது.

    சுமார் 50 நாட்களில் 2 கிலோ எடை வரை வரும் கறிக்கோழி தற்போது குளிர்ச்சி காரணமாக 38 முதல் 40 நாட்களில் 2 கிலோ எடையை எட்டி விடுகிறது. கேரளாவில் மழை பெய்து வருவதால் பல்லடத்தில் இருந்து அதிக அளவில் கறிக்கோழிகள் அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மேலும் மழை காரணமாக கேரளாவில் கறிக்கோழி இறைச்சி நுகர்வு குறைந்து விட்டது. இதனால் பல்லடம் பகுதியில் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் பண்ணை கொள்முதல் படிப்படியாக குறைந்து வருகிறது. 

    கடந்த மாதம் ஒரு கிலோ ரூ. 88 -க்கு கொள்முதல் செய்யப்பட்ட கறிக்கோழி தற்போது ரூ. 72-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் உற்பத்தியை குறைக்க போவதாக பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×